சவால்கள், சோதனைகள் மிக்க காலத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திரைப்படத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் தனிநபர் இடைவெளிக்காக இருக்கைகளில் இடம் ஒதுக்குவது, ஓடிடியில் இணைவழி வெளியாகும் புதுப்படங்களை சமாளிப்பது, ஊழியர்களையும் செலவுகளையும் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திரையரங்குகள் எதிர்கொண்டுள்ளன.
அதுமட்டுமின்றி பங்குச் சந்தைகளிலும் அவற்றின் மதிப்பு மீட்டெடுக்கப்பட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. திரையுலகினர் ஒன்றுபட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், பல பெரிய படங்களின் மகா வசூலுக்குக் காரணமாக விளங்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி உள்ளது.
Comments