நாட்டில் 15 நாள்களில் 70,000 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் கடந்த 15 நாள்களில் 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியது முதல் 100 நாள்களுக்கு பிறகே, 68 ஆயிரத்தை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தாண்டியது. இதற்கடுத்து நேற்று முன்தினம் வரையிலான 15 நாள்களில் கொரோனா தொற்றால் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 நாள்களில் 2 மடங்கு அதிகரித்திருப்பதும், டெல்லியில் 14 நாள்களிலும், பீகாரில் 7 நாள்களிலும் அதிகரித்திருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
இதேபோல் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 நாள்களில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 நாள்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்த உயிரிழப்பில் 41 சதவீதம், மகாராஷ்டிராவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments