சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

0 3718
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 488 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஆயிரத்து 253 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 188 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 96 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதித்த 5 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 புள்ளி 6 சதவீதம் ஆண்களும், 39 புள்ளி 92 சதவீதம் பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments