கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முழு உடல் கவசங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் வாங்க மத்திய அரசு அறிவுறுத்தல்

0 1369
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முழு உடல் கவசங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் வாங்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முழு உடல் கவசங்களை அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சில இடங்களில் முழு உடல் கவசங்கள் தரமற்றவையாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கொள்முதல் முகவரான எச்.எல்.எல். லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 8 ஆய்வகங்களால் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்தும் தாங்களும் தனிப்பட்ட முறையில் தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்தியுமே வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தர சோதனை நடத்தி முழு உடல் கவசங்களை வாங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தரம் உறுதிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments