இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.45 லட்சத்தை தாண்டியது

0 1446
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.45 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் மேலும் 6 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் மேலும் 6 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும், 146 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 380ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 167ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் 80 ஆயிரத்து 722 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், 60 ஆயிரத்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 52 ஆயிரத்து 667ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 695ஆக உயர்ந்துள்ளது. 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 82ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 118ஆகவும் அதிகரித்துள்ளது. 3ம் இடத்திலுள்ள குஜராத்திலும், 4ம் இடத்திலுள்ள டெல்லியிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தையும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில்  தலா  6 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில், மேற்குவங்கம், ஆந்திரத்தில்  3 ஆயிரத்தையும், பீகார், கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில்   2 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதுதவிர்த்து, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர்,ஒடிசா, தெலுங்கானாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தலா ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments