வாடகை விமானங்களுக்கும் அனுமதி அளித்தது மத்திய அரசு
நேற்று முதல் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் வாடகை விமானங்களையும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அவற்றுக்கான கட்டுப்பாட்டு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வாடகை விமானங்கள், ஹெலிகாப்டர்களை பதிவு செய்யும் பயணிகளுக்கு அனுமதிச் சீட்டுகளை ஹெலிகாப்டர் தளங்கள், விமான நிலையங்களில் தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார விதிகளின்படி வழங்கப்பட வேண்டும். பயணிகள் 45 நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடவேண்டும் முதியோர், கர்ப்பிணிகள், தீவிர நோய்கள் உள்ளோர் விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். எனினும் ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு இது பொருந்தாது பயணிகள் விமானக் கட்டணம் பொருந்தாது. கட்டணம் வாடகை விமான இயக்குநர்கள், பயணிகள் இடையேயான ஒப்பந்த அடிப்படையிலானது.
Comments