அம்பன் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும்பணியில் 2.35 லட்சம் பேர் -மேற்குவங்க அரசு
மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயல் சேதப் பாதிப்புகளை சீரமைக்க ராணுவம் போலீஸ் உள்ளிட்ட 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயலுக்கு 80 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தி மின்கட்டமைப்புகள் மற்று மின் வினியோக சீரமைப்பு, குடிநீர் வினியோகத்தை ஒழுங்குபடுத்துதல், சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிககளில் ராணுவம், போலீஸ், தேசிய மற்றும் மாநில பேரிட மீட்புப் படையினர் மற்றும் பல்வேறு அரசுத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
80 சதவீத அத்தியாவசி சேவைகள் தொடங்கப்பட்டதாகாவும், எஞ்சிய இடங்களிலும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Comments