கடலில் விழுந்த சிங்கப்பூர் சரக்கு கப்பலின் 40கண்டெய்னர்கள்
சிங்கப்பூர் சரக்கு கப்பலில் இருந்த 40க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆழ்கடல் பகுதியில் தவறி விழுந்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏபிஎல் இங்கிலாந்து என்ற பெயர் கொண்ட கப்பல் சீனாவின் நிங்போ என்ற இடத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது. சிட்னி அருகே பயணித்த போது மோசமான வானிலை மற்றும் அலைகளின் கடும் சீற்றம் காரணமாக அந்த கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்களின் பாகங்களை கடலில் கண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதே நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டில் 37 கன்டெய்னர்களை கடலில் தொலைத்தது.
Comments