மீண்டும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் காசியாபாத் எல்லைகளை மூடி சீல் வைத்த போலீசார்

0 1395
மீண்டும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் காசியாபாத் எல்லைகளை மூடி சீல் வைத்த போலீசார்

டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காசியாபாத் நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகளவில் இருப்பதால் அதன் சாலைகளை போலீசார் மூடி சீல் வைத்துள்ளனர்.

இன்று காலை அதிக அளவில் போக்குவரத்து காணப்பட்டதையடுத்து போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனங்களை சோதனையிட்டனர். அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோர் அரசு அலுவலர்கள் அனுமதிக்கப்பட்டு அவசியமில்லாமல் பயணிப்போர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சரக்கு வாகனங்களுக்கும் தடையில்லை. டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் பயனாக ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தற்போது காசியாபாத்தில் 33 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments