3 மாதங்களுக்குப் பின் தாயை சந்திக்க விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

0 7392
3 மாதங்களாக தாயை பிரிந்திருந்த 5 வயது சிறுவன், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், தனியாக பயணித்து, தன் தாயை சந்தித்துள்ளான்.

3 மாதங்களாக தாயை பிரிந்திருந்த 5 வயது சிறுவன், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், தனியாக பயணித்து, தன் தாயை சந்தித்துள்ளான்.

3 மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள தன் தாத்தாவின் வீட்டிற்கு சென்ற 5 வயது சிறுவன் விஹான் ஷர்மா, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூரு திரும்ப முடியாமல் தவித்து வந்தான்.

இந்நிலையில், ஏறத்தாழ 2 மாத இடைவெளிக்கு பின், உள்நாட்டு விமான சேவை மீண்டும் துவக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய விமானத்தில், சிறப்பு அனுமதி பெற்ற பயணிகள் பிரிவில், தனியாக பயணித்த சிறுவன், பத்திரமாக பெங்களூரு வந்தடைந்தான்.

மகனின் வருகைக்காக விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த அவன் தாய், 3 மாதங்களுக்கு பின் வந்த மகனை வாரியணைத்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments