புதிய உச்சம் தொட்ட கொரோனா நாளும் உயரும் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்து விட்டது.
இந்தியாவில் புதிய உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 977 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, ஒரே நாளில் 2 ஆயிரத்து 436 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் மட்டும்
கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
2- வது இடம் வகிக்கும் தமிழகத்தில், அடங்க மறுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 ஆயிரத்தை தாண்டி விட்டது.
குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 500 - ஐ நெருங்க, டெல்லியில் 13 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தானில் பாதிப்பு, 7 ஆயிரத்தை தாண்ட , மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத் தில் தலா 6 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர்.
மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவிலும் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை எட்டும் நிலையில் உயர்ந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளாவில், ஒரே நாளில் மட்டும் 49 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 77 ஆயிரத்து 103 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வர, 57 ஆயிரத்து 720 பேர் இதுவரை குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில்,இந்தியா, 10 - வது இடம் வகிக்கிறது.
#CoronaVirusUpdates:
— Ministry of Health ?? #StayHome #StaySafe (@MoHFW_INDIA) May 25, 2020
A total of 57,720 people has been cured so far. In the last 24 hours, 3280 patients were found cured. https://t.co/RqdhgOlh2E#CoronaOutbreak @PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @CovidIndiaSeva @COVIDNewsByMIB @MIB_India @PIBHomeAffairs
Comments