ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 16 ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு ஒரிரு தினங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அங்குள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சோதனை செய்யுமாறு ஊழியர் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதைப் போன்று அரியானா மாநிலம் மனேசரில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதாகவும், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாக வாய்ப்புள்ளதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகளை திறந்தால் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Just days after restarting operations, three employees from @HyundaiIndia and one employee from @Maruti_Corp has tested #COVID19 positive. Your take? ✍️#Coronavirus #COVIDIndia https://t.co/v0EO3euyez
— moneycontrol (@moneycontrolcom) May 25, 2020
Comments