சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
ஊரடங்கால் நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், சிஏஏ போராட்டத்தால் கிழக்கு டெல்லியில் ஒத்திவைக்கபட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற ஏதுவாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் நடந்த தேர்வுகள், தற்போது 15,000 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Comments