25 சதவீத பணியாளர்களுடன் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன

0 1325
தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் சுமார் 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் சுமார் 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. 

தமிழகத்தில் சென்னை உட்பட 17 தொழிற்பேட்டைகள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிண்டி தொழிற்பேட்டையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே செயல்படத் தொடங்கி உள்ளன. அதேபோன்று அம்பத்துர் தொழிற்பேட்டையில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டதால் பெரும்பலான நிறுவனங்கள் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து வரவும், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை தூய்மைபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்த ஊழியர்கள் மட்டுமே தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments