மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதலமைச்சரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்

0 13284
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழகத் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஓபிஎஸ் நலமுடன் உள்ளதாகவும், இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments