சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
சென்னையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மண்டலங்களில் பாதிப்பு தலா ஆயிரத்தை கடந்துள்ளது.
முதலிடத்தில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் 1,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 1,460 பேரும், திருவிக நகரில் 1,188 பேரும், தேனாம்பேட்டையில் 1,118 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தேனாம்பேட்டையை தொடர்ந்து ஆயிரம் பாதிப்புகளை கடந்த 5வது மண்டலமாக தண்டையார்ப்பேட்டை உருவெடுத்துள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,044 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அண்ணாநகர், வளசரவாக்கம் மண்டலங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் 10,576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 4,781 பேர் குணமடைந்துள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 5,655 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments