தூத்துக்குடி மாவட்டம் சிவகளை தொல்லியல் களத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின

0 2695
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை தொல்லியல் களத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

அங்கு 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தை ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து தொல்லியல் துறைக்கு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போடப்பட்ட பணிகள் தற்போது 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கியுள்ளன. கீழடியை விட பழமையானது என்று கருதப்படும் சிவகளை தொல்லியல் களத்தில் பரம்பு பகுதியில் 2 இடங்களிலும் வெள்ளத்திரட்டு பகுதியில் ஒரு இடத்திலும் அகழாய்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments