வட மாநிலங்களில் 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை
நாட்டின் வட மாநிலங்களில் 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வுத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்குமுன் வடமாநிலங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை நிலவுவதுடன் அனல்காற்று வீசுவது வழக்கம்.
ஞாயிறன்று ராஜஸ்தானின் சுரு என்னுமிடத்தில் அதிகப்பட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மகாராஷ்டிரத்தின் விதர்ப்பா பகுதியில் பல இடங்களில் 45 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. இந்நிலையில் பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டித்தின் விதர்ப்பா பகுதி ஆகியவற்றில் 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments