உ.பி., தொழிலாளர்களைப் பிற மாநிலங்களோ, பிற நாடுகளோ பணியமர்த்த வேண்டுமென்றால் மாநில அரசின் ஒப்புதல் தேவை - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத் தொழிலாளர்களைப் பிற மாநிலங்களோ, பிற நாடுகளோ பணியமர்த்த வேண்டுமென்றால் மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துக் காணொலியில் நடைபெற்ற கருத்தரங்கில் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது, வெளிமாநிலம் செல்லும் தொழிலாளர்களுக்குக் காப்பீடு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆட்கள் தேவைப்படும் மாநிலங்கள் ஒப்புதல் பெற்று அழைத்துச் வேண்டும் என்றும், ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார். வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு வழங்குவதற்காகப் புலம்பெயர் தொழிலாளர் ஆணையத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments