ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுப்பதை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை எடுப்பதை நிறுத்திக் கொண்டதாகவும், அதை எடுத்ததால் தமக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயினின் தீவிர ஆதரவாளரான டிரம்ப், இரண்டு வாரமாக அதை எடுத்துக் கொள்வதாக ஏற்கனவே தெரிவித்தார். அதே சமயம் அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவர்கள், கொரொனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை கொடுத்தால் ஆபத்து ஏற்படும் என எச்சரித்து வருகின்றனர்.
இரண்டு வாரங்களாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை எடுத்துக் கொண்ட பிறகும் தாம் நலமுடன் இருப்பதாக டிரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் கூறியது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க மருத்துவர்கள், அவருக்கு தொற்று இல்லை என்பதால், எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
Comments