டெல்லியில் ஊரடங்கு முடிந்தபின் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டம்
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஊரடங்கு முடிந்த பின் போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணிகளுக்கான விதிமுறைகளை வகுத்து வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இரு மாதங்களாக ஊரடங்கு காலத்தில் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த பின் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறது. நிலையத்திலும் ரயில்களிலும் பயணிகள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்கான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது. ஒரு இருக்கையைக் காலியாக விட்டு மற்றொரு இருக்கையில் ஆட்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதனால் ஒரு பெட்டியில் அதிகப்பட்சம் 50 பேர் வரை செல்ல அனுமதிக்கப்படும்.
Our plans 2020 pic.twitter.com/36X5qoJYq4
— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) May 23, 2020
Comments