"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்க உ.பி. அரசு முடிவு
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தனி ஆணையத்தை ஏற்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனீஷ் அவஸ்தி விடுத்துள்ள அறிக்கையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்காகவும், மாநிலத்திலும் இடம்பெயர்வு ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் மாநில அரசின் முயற்சியால், இதுவரை 23 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இதனால் அவர்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு வேலை பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments