அதிரும் உலகம் ...தொடரும் கொரோனா பாதிப்பு..
உலக நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் ரஷ்யாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிஆனதால், பாதிப்பு 16 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டி விட்டது. அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு, ஒரு லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.2 - வது இடத்திற்கு முன்னேறிய பிரேசிலில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டனர்.
ரஷியாவில் 8 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட , இத்தாலியில் ஒரே நாளில் 153 பேர் பலியாகி உள்ளனர்.ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்து உள்ளது.ஈரான், சவுதி அரேபியா, மெக்சிகோ, பாகிஸ்தான், கத்தார், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் ஆக்டோபஸ் கரம் நீண்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர்.உலகம் முழுவதும் சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பிய போதிலும், சுமார் 54 ஆயிரம் பேர், கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
Comments