50 சதவீத ஊழியர்களுடன்,உ.பி.யில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்

0 1246
50 சதவீத ஊழியர்களுடன்,உ.பி.யில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து அரசு அலுவலங்களும் இன்று முதல் செயல்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் ஆர்.கே. திவாரி விடுத்துள்ள அறிக்கையில், புதிய முறையின்படி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 3 கட்டங்களாக அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அலுவலகங்களும் 50 விழுக்காடு ஊழியர்களுடன் தனிமனித இடைவெளியுடன் இயங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் தங்களின் மொபைல் போன்களில் ஆரோக்கிய சேது செயலியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments