குன்னூர் காட்டேரி பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் இந்த பூங்கா வெறிச்சோடிய நிலையில் உள்ளது. இந்த கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவை அனைத்தும் வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இந்த பூக்கள் அனைத்தும் தற்போது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகாமல் வாடும் நிலையில் உள்ளன.
Comments