பாதியாகக் குறைந்த அமெரிக்காவின் கொரோனா உயிரிழப்பு விகிதம்
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நோய்த்தொற்று மரணங்கள் நேற்று சரிபாதியாகக் குறைந்து காணப்பட்டது.
கொரோனா பரவியதில் இருந்து அமெரிக்காவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்திருந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்ததால் இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 200ஐத் தாண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 19 ஆயிரத்து 600 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 86 ஆயிரமாக உயர்ந்தது. இவர்களில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Comments