விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டதாக வந்த செய்தி தவறானது -அமைச்சர் தங்கமணி
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விருதாசலத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டதாக வந்த செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தான் முதலமைச்சர் மற்றும் மாநில அரசின் கொள்கை என தெரிவித்தார். மேலும் தட்கல் முறை மின் இணைப்புக்கு மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், அதற்கும் மீட்டர் பொருத்த வேண்டாம் என முதலமைச்சர் கூறி விட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
Comments