பயணிகள் வருகைக் குறைவால் சேவையை ரத்து செய்த விமான நிறுவனங்கள்..
இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த விமானப்போக்குவரத்து இன்று தொடங்கியுள்ள நிலையில், குறைவான பயணிகளே வந்திருந்ததால் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படவில்லை.
விமானப் போக்குவரத்து தொடங்கியதையொட்டி, சென்னை உள்நாட்டு விமான முனையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தனிநபர் இடைவெளி உறுதிசெய்யப்பட்டுள்ளதா எனவும் அவர்கள் பார்வையிட்டனர்.
இதனிடையே, தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 25 விமானங்கள் மட்டுமே வந்திறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
இன்று காலை, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ, ஏர் ஏசியா, ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் குறைவான பயணிகளே வந்திருந்ததால் கடைசி நேரத்தில் தங்கள் சேவையை ரத்து செய்தன. அகர்தலா செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், விமானம் ரத்தானதால் என்ன செய்வது எனத் தெரியாமல் காத்திருந்தனர்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று காலை சில விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
Operations in Andhra Pradesh will recommence on limited scale from 26 May. For Tamil Nadu, there will be max 25 arrivals in Chennai but there's no limit on no. of departures.For other airports in TN, flights will operate as in other parts of country: Union Civil Aviation Minister
— ANI (@ANI) May 24, 2020
Comments