இறுகும் பிடி திணறும் சென்னை உலுக்கும் கொரோனா

0 3832
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 600 ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்றால் உயிரிழந்த 111 பேரில், சென்னை யில் மட்டும் 78 பேர் பலி ஆகி இருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 600 ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்றால் உயிரிழந்த 111 பேரில்,  சென்னை யில் மட்டும் 78 பேர் பலி ஆகி இருக்கிறார்கள். 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தமிழகத்தில் துவங்கிய சில நாட்களில் இருந்து ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்பை சென்னை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் கணிசமாக உயர்ந்து விட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 587 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 46 பேர் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 34 பேருக்கும், காஞ்சியில் 21 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது.

மதுரையில் 6 பேரும், திருவண்ணாமலையில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம் மற்றும் கடலூரில் தலா 3 பேருக்கும், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை யில் தலா 2 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது.

அதேநேரம், மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 18 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை .

சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 653 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, 4 ஆயிரத்து 844 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவுக்கு இரை ஆன 111 பேரில், சென்னையில் மட்டும் 78 பேர் உயிரிழந் துள்ளனர். திருவள்ளூரில் 9 பேரும், செங்கல் பட்டில் 7 பேரும் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.

மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் தமிழக சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், கொரோனாவின்கிடுக்கிப்பிடி, சென்னையை இறுக்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments