கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இலங்கை, மொரீசியஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, அந்நியச் செலாவணித் தேவைக்காக எட்டாயிரத்து 357 கோடி ரூபாய் கடனுதவி வழங்குமாறு மோடியிடம் கோத்தபய கோரியதாகக் கூறப்படுகிறது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணிக்க இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அப்போது பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மொரீசியஸ் பிரதமர் பிரவீந்த் ஜெகநாத்துடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
கொரோனா தடுப்புப் பணிக்காக 14 மருத்துவர்களுடன் மருந்து மாத்திரைகளையும் கேசரி என்கிற கடற்படைக் கப்பலில் அனுப்பி வைத்ததற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
Comments