இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இணையத்தளத்தில் வீட்டுத் தேவைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில் அவற்றுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் இணையத்தளத்தில் பொருள் விற்பனைச் சேவையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னோட்டமாகக் கடந்த மாதமே மும்பையின் சில பகுதிகளில் பொருட்கள் வழங்கும் சேவையைத் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக இருநூற்றுக்கு மேற்பட்ட நகரங்களில் இந்தச் சேவையைத் தொடங்க உள்ளது.
Comments