அடங்க மறுக்கும் கொரோனா உச்சம் தொடும் உக்கிரம்

0 2086
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங் களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 50 ஆயிரத்தை தாண்டி விட்டது. 

உலகை அச்சுறுத்தும் கொரோனாவால், இந்தியாவில் 7 மாநிலங்கள் பெரிய அளவில், பாதிக்கப்பட்டு உள்ளன. அடங்க மறுக்கும் கொரோனாவால் உயிர்ப்பலியும், வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 41 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விட்டது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 பேர் பாதிக்கப்பட்டனர்- அங்கு 2 பேர் உயிரிழந்தனர்.

2- வது இடம் வகிக்கும் தமிழகத்தில், அடங்க மறுக்கும் கொரோனாவால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குஜராத்தில் பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்க, டெல்லியில் 13 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்க, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட, ஆந்திரா, பீஹார், பஞ்சாப்  மற்றும் கர்நாடகாவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை தலா 2 ஆயிரத்தை தாண்டி விட்டன.

தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு தலா 2 ஆயிரத்தை எட்டும் நிலையில் உயர்ந்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீர், ஓடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சுமார் ஆயிரம் பேரில் இருந்து ஆயிரத்து 600 பேர் வரை, பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 73 ஆயிரத்து 560 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வர, 54 ஆயிரத்து 441 பேர் இதுவரை குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments