லூதியானாவில் நூற்பாலையில் தீப்பற்றிப் பஞ்சுப் பொதிகள், நூல்கண்டுகள் எரிந்து சாம்பல்
பஞ்சாபின் லூதியானாவில் ஒரு நூற்பாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சுப் பொதிகள், நூல்கண்டுகள் எரிந்து சாம்பலாயின.
லூதியானாவில் சீமா சவுக் என்னுமிடத்தில் உள்ள தனியார் நூற்பாலை ஊரடங்கு தொடங்கியதில் இருந்து மூடப்பட்டிருந்தது. இன்னும் வேலை தொடங்காத நிலையில், அதன் உரிமையாளர் வந்து ஆலையைப் பார்வையிட்டுள்ளார்.
அப்போது திடீரெனத் தீப்பற்றி விரைவாகப் பஞ்சுப் பொதிகளுக்கும் குவித்து வைத்திருந்த நூல் கண்டுகளுக்கும் பரவியது. இதையடுத்து உரிமையாளர் விரைவாக வெளியேறிவிட்டார்.
ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து பல பகுதிகளிலும் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Comments