தகுதியுள்ள அனைவருக்கும் அச்சமின்றிக் கடன் வழங்க வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்கும்படி பொதுத்துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயல் அலுவலர்கள், மேலாண் இயக்குநர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தகுதியுள்ள நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக வங்கிகளுக்கு மத்திய அரசு நூறு விழுக்காடு உத்தரவாதம் அளிப்பதாகத் தெரிவித்தார்.
சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ஆகியோரைப் பற்றிக் கவலைப்படாமல் அச்சமின்றிக் கடன் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.
கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால் அதற்காக வங்கி மீதோ, அதிகாரிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.
Comments