செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 52 பேருக்கு கொரோனா

0 2160
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இன்று மேலும் 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில்,10 பேர் ஒரகடத்தில் அமைந்துள்ள நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆவர்.

இதையடுத்து, நோக்கியா தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, அங்குள்ள ஊழியர்களை தனிமைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 761ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 270 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் செங்கல்பட்டு 2-வது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments