சிகிச்சைக்கு அடங்காத கொரோனா பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியது
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரகணக்கில் உலக நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரோனாவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு பிறகு 22 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர்.
அதேவேளையில் பல்வேறு நாடுகளிலும் மருத்துவமனைகளில் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2ம் இடத்திலும், ரஷ்யா 3ம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 60 ஆயிரத்தையும், உயிரிழப்பு 98 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
பிரேசிலில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ள வேளையில், பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் 4ம் இடத்திலும், பிரிட்டன் 5ம் இடத்திலும் உள்ளன. அந்த 2 நாடுகளிலும் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துவிட்டது.
இத்தாலியிலும் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் பிரிட்டன், இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Comments