குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் பன்னீர் திராட்சையை பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை
குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பன்னீர் திராட்சையை 106 டிகிரி வெப்பநிலை பதிவாகும் பெரம்பலூர் மாவட்ட விவசாயி ஒருவர் இயற்கை முறையில் விளைவித்து சாதனை படைத்துள்ளார்.
எசனை கிராமத்தைச் சேர்ந்த சுருளிராஜன் தூண் கற்களை நாட்டு இரும்பு பைப்புகள் மூலம் பந்தல் அமைத்து,வெயில் அதிகம் படாத வகையில் பசுமைக் குடிலில் திராட்சைக் கொடிகளை பராமரித்து வருகிறார்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளின் சாணம், மண்புழு உரம், கடலை, ஆமணக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களால் திராட்சை அமோக விளைச்சல் கண்டுள்ளது.
நாளொன்றுக்கு 150 முதல் 200 கிலோ அறுவடை செய்வதாகக் கூறும் அவர், முறையாக பராமரித்தால் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்கிறார்.
Comments