கொரோனா இல்லாத மாநிலமாக திகழும் கோவாவில் உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வர அனுமதி
கொரோனா இல்லாத மாநிலமாக திகழும் கோவாவில், உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரத் தடையில்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவே முக்கியத் தொழிலாக விளங்கும் கோவாவில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, அதனை சார்ந்த வியாபாரிகள், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தற்காலிகமான இழப்பு தான் என தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், சுற்றுலா தொழிலிலும் விரைவில் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா இல்லாத மாநிலமாக இருப்பதால், உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரலாம் என்றும், அதே சமயம் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகள் கோவா வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments