திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சொத்துகளை விற்பதா?-ஜனசேனா கட்சி
ஆந்திர மக்களுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதியில்லாததால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழக பக்தர்கள் நன்கொடையாக அளித்த சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஏழுமலையான் கோயிலுக்கு விழுப்புரம், திருவள்ளூர், குடியாத்தம் உள்ளிட்ட தமிழகத்தின் 23 இடங்களில் பக்தர்கள் காணிக்கையாக நிலம் உள்ளிட்ட சொத்துகளை அளித்துள்ளனர். அதை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழுவை தேவஸ்தானம் அமைத்திருப்பதாக ஜனசேனா கட்சியின் மூத்த தலைவர் கிரண் ராயல் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments