ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி திருப்பத்தூரில் பிடிபட்டார்

0 6006

கொரோனா தொற்று பாதிப்போடு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் திருப்பத்தூரில் பிடிபட்டார்.

பல்பநத்தம் கிராமத்தை சேர்ந்த அந்த நபர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி சொந்த ஊருக்கு செல்வதற்காக திருப்பத்தூர் சென்றுள்ளார்.

இது குறித்து மருத்துவ நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு செல்போன் எண் மூலம் அந்த நபரை திருப்பத்தூரில் பிடித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments