இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 141 விமானங்கள் இயக்க அனுமதி
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்களை இயக்கி வரும் நிலையில் மேலும் 141 விமானங்கள் கூடுதலாக இயக்க அனுமதி அளித்துள்ளது.
கிழக்காசிய நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும். இதில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஓமன், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் திட்டம் இரண்டாவது கட்டத்தை தொடங்கிய நிலையில் ,மொத்தம் 400 விமானங்கள் இயங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
84 விமானங்கள் கேரளத்திற்கு இந்தியர்களை அழைத்து வர உள்ளன. தமிழ்நாட்டுக்கு 9 விமானங்களும் டெல்லிக்கு 10 விமானங்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 24 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். 98 நாடுகளில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
Comments