அடுத்த 10 நாட்களில் 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்-ரயில்வே வாரியத் தலைவர் அறிவிப்பு

0 2059

அடுத்த 10 நாட்களில் 2 ஆயிரத்து 600 சிறப்பு ரயில்கள் மூலம் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படுவார்கள் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு நாட்களில் நாள்தோறும் சராசரியாக 260 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், தினமும் மூன்று லட்சம் பயணிகள் அழைத்து செல்ல இலக்கு நிர்ணயம் செய்து செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதாகக் கூறிய அவர், சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, தனி மனித இடைவெளியுடன் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments