உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவன் கைது

0 3130

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த நபரை மகாராஷ்ட்ரா தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் யோகியை கொல்லப் போவதாக செல்போனில் மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் செல்போன் எண் மூலமாக அடையாளம் கண்டுபிடித்தனர். அவனை கைது செய்து உத்தரப்பிரதேச காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவன் போதைப் பொருளுக்கு அடிமையான 25 வயது இளைஞன் என்றும் அவன் பெயர் காம்ரான் அமீன் என்றும் போலீசார் தெரிவித்தனர். லக்னோ கோமதி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று அவனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments