கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிபர், மொரிஷியஸ் பிரதமருடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரனோவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூகநாத் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அரசு மிகவும் சிறப்பான முறையில் கொரோனாவை கட்டுப்படுத்தி வருவதாக தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். கடல்சார் அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா அறிவித்துள்ள திட்டங்களையும் குறிப்பிட்டுள்ள மோடி இவ்விரு நாடுகளுக்கும் முதலீடுகள் பலப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
Had an excellent talk with President @GotabayaR. Sri Lanka is fighting COVID-19 effectively under his leadership. India will continue to support our close maritime neighbour in dealing with the pandemic and its economic impact.
— Narendra Modi (@narendramodi) May 23, 2020
Comments