வழிபாட்டு தலங்களும் அத்தியாவசிய தேவை என ட்ரம்ப் கருத்து
தேவாலயங்கள் அத்தியாவசிய தேவைகள் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவற்றை மீண்டும் திறக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தாக்கத்தால் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு தற்போதைய நிலவரப்படி அதிகளவிலான பிரார்த்தனைகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வழிபாட்டு தலங்களும் அத்தியாவசிய தேவை எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து தேவாலயங்கள், மசூதிகளை திறக்கவும் மாகாண ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு நேரடியாக உத்தரவிட அமெரிக்க அதிபருக்கு அதிகாரமில்லாத போதும், அதற்கென மாநிலங்களுக்கு வழங்கப்படும் உதவியை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments