கொரோனாவால் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு
அரசு முட்டைகளை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலமும் கொரோனா நோயாளிகளுக்கும் வினியோகிக்க கோழிப்பண்ணையாளர்கள் கோரியுள்ளனர்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க மாநில தலைவர் சிங்கராஜ், கொரோனாவால் கோழிப் பண்ணை தொழில் பாதிப்பு குறித்து சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையினர் கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.
கொரோனாவால் கோழிப்பண்ணையாளர்களுக்கு 560 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சத்துத்துணவிற்கு முட்டைகள் செல்லாததால் விற்பனை குறைந்து வருவதாகவும் கூறினார்.
கோழிப்பண்ணைகளில் பணியாற்றிய 50 சதவீத வடமாநிலத்தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோரை கோழிப் பண்ணை தொழிலில் அரசு ஈடுப்படுத்தவும் கோரினார்.
Comments