அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மறு சீரமைக்க ராணுவத்தின் உதவியை கோரிய மேற்கு வங்க அரசு
அம்பன் புயலால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்க மாநிலத்தில் மீட்பு மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அம்மாநில அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.
அதிதீவிர அம்பன் புயல் கரையை கடந்த போது மேற்கு வங்கத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தி சென்றது. மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதும், துரிதமாக பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவைப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில உள்துறையின் ட்விட்டர் பதிவில், மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே, துறைமுகம் மற்றும் தனியார் நிறுவனங்களும் மீட்பு பணிகளில் ஈடுபட ஆட்களையும், உபகரணங்களையும் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
Comments