விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை

0 2444
பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இபாஸ் தேவையில்லை என்றும் அடையாள அட்டையே போதுமானது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இபாஸ் தேவையில்லை என்றும் அடையாள அட்டையே போதுமானது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவும், அருகில் உள்ள மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை கண்ணில் படும்படி பள்ளி சுவர்களில் ஒட்டவும் உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments