எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
எடப்பாடி பயணியர் மாளிகையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், தடுப்பு பணிகள் மட்டுமின்றி குடிமராமத்து மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
முன்னதாக அதிமுக வார்டு செயலாளர்கள் 18 பேருக்கு, 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், முகக்கவசம், சானிடைசர் அடங்கிய நிவாரண தொகுப்பையும் முதலமைச்சர் வழங்கினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக வார்டு செயலாளர்கள் 18 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். ஏற்கனவே 90 ஆயிரம் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் நிவாரணப் பொருட்களை வழங்கிய நிலையில், தற்போது எடப்பாடி பயணியர் மாளிகையில், 18 அதிமுக வார்டு செயலாளர்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், முகக்கவசம், சானிடைசர் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இன்று (23.5.2020) சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள், குடிமராமத்து பணிகள் மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/ObGEn8dIUy
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 23, 2020
Comments