பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைமுறை தொடர்பான சந்தேகங்கள், அச்சங்களுக்கு தீர்வளிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் Toll-free number அறிவிப்பு 

0 2234

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வு நடைமுறை தொடர்பான தங்கள் சந்தேகங்கள், அச்சங்களுக்கு தீர்வளிக்க பள்ளிக் கல்வித்துறை டோல் ஃப்ரீ எண் ஒன்றை அறிவித்துள்ளது. 

மாணவர்களுக்கு உதவ யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண 9266617888 என்ற டோல்ஃப்ரீ எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் துறையின் சார்பில் திரும்ப அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது ஒலிபரப்பாகும் ஆடியோவில், கொரோனா சூழலைக் கடந்து தேர்வெழுதச் செல்லும்போது எதிர்ப்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments